ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:28 IST)

தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!

ban
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!
தமிழ்நாட்டில் 6 வகையான பூச்சி கொல்லிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் விவரம் இதோ:
 
monocroptophos
 
profenophos
 
cephate
 
profenophos+ cypermethrin
 
chlorpyriphos+ cypermethrin
 
chlorphyriphos
 
Edited by Mahendran