திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:14 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக்: ஹேக்கர்கள் அத்துமீறல்

Senthil Balaji
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பக்கமாக அது மாற்றப்பட்டு உள்ளது 
 
ஹேக்கர்களின் இந்த அத்துமீறல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஹேக் செய்யபப்ட்ட டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.