ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (10:56 IST)

சசிகலா வருவார்.. பிரச்சாரம் செய்வார்! – டிடிவி தினகரன் கூட்டணி ப்ளான்!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையாகி பிரச்சாரம் மேற்கொள்வார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் எதிர்வரும் 2020 சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.

அமமுக தலைமையில் கூட்டணி என்றாலும் தமிழகத்தின் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசி வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் சில முக்கிய கட்சிகளின் பெயர் பேசப்பட்டு வருகிறது.