திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (14:13 IST)

விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை

அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைபற்ற சசிகலா பெருமுயற்சி எடுத்த போதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் தான் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலர் நானே  என அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்