ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (14:59 IST)

ஆளும் கட்சி அமைச்சர்களை சிறைக்கு அனுப்பி வைத்தவர் அண்ணாமலை: சசிகலா புஷ்பா

sasikala pushpa
கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா பேசிய போது எந்த நாட்டிலாவது ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிறை சென்றிருக்கிறார்களா? ஆனால் தமிழகத்தில் ஆளும் கட்சி அமைச்சர்களை சிறைக்கு அனுப்பியவர் அண்ணாமலை என்று பேசினார். 
 
கடவுள் மறுப்பு கொள்கையை திமுகவினர் கடைபிடிக்கின்றனர், ஆனால் முதல்வரின் மனைவியே கோயில்களுக்கு சென்று வருகிறார், அவரை யாராவது தடுக்க முடிகிறதா என்று கூறினார். 
 
மேலும் டெல்லியில் இருந்து அடிக்கடி தமிழகத்திற்கு வந்து தமிழகத்தின் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டு உள்ளார், பக்கத்தில் இருக்கும் மு க ஸ்டாலின் ஒரு முறையாவது கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார் 
 
தமிழகத்தில் முதன்மை கட்சியாக பாஜக இருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பீதியில் இருப்பதாகவும் எந்த கிராமத்திற்கு சென்றாலும் இரண்டரை லட்சம் மூன்று லட்சம் பாஜக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் அதற்கு காரணம் அண்ணாமலை தான் என்றும் வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் சசிகலா புஷ்பா பேசினார். 
 
Edited by Mahendran