திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (16:31 IST)

கொரோனா தடுப்புக்கு ரூ. 1000 கோடி நிதி தேவை : பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை !

தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து  தமிழகத்திற்கு உடனடியாக ரூ. 1000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தபடவுள்ளது.

இதில்,மக்களுக்கான நிவாரண உதவிகள், மற்றும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென  தெரிகிறது.

தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1000கோடியை வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன்,பிரதமர் மோடி கலந்துகொண்ட கணோளி ஆலோசனைக் கூட்டத்தில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

ஏற்கனெவே, தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.510 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.