ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:05 IST)

பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் பரபரப்பு

Robbery
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 
 
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் ஆர்.கே. இவர் ‘எல்லாம் அவன் செயல்’ ’புலிவேஷம்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பாலாவின் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாக நடித்த இவர் விஜய்யின் ஜில்லா விஷாலின் பாயும்புலி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் 
 
இந்த நிலையில் நேற்று ஆர்கே மனைவி ராஜி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர் 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஆர்கே வீட்டு காவலரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
Edited by Mahendran