உள்துறை அமைச்சரின் தோல்வியே வன்முறைக்கு காரணம்.. ரஜினிகாந்த் கண்டனம்

Arun Prasath| Last Updated: புதன், 26 பிப்ரவரி 2020 (20:40 IST)
டெல்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் தோல்வியே காரணம் என ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.  இதில் தற்போதைய நிலவரப்படி 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், “டெல்லி கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம். மேலும் உளவுத்துறை சரியாக செயல்பாடதும் காரணம்.

இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :