ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (15:54 IST)

பொங்கல் பண்டிகையில் கட்சி பெயர் அறிவிப்பு? ரஜினி திட்டம்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியில் பெயரை வரும் பொங்கல் திருநாளில் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த அரசியலில் களமிறங்குவார் என வெகு காலம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். 
 
அரசியலுக்கு வருவதற்கு உறுதி என்று மட்டுமே அறிவித்தார். அரசியல் கட்சி குறித்து மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதையடுத்து அவர் புதிதாக தொடங்க இருக்கும் அரசியல் கட்சியின் பெயரை வரும் பொங்கல் திருநாளில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆன்மீக வழியில் அரசியல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.
 
ரஜினி தனது அரசியல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரசிகர்கள் அனைவரையும் தொண்டர்களாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.