திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (07:45 IST)

சென்னை விமான நிலைய ரன்வேயில் மழைநீர்: விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக தகவல்..!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து சாலைகளை நீர் தேங்கியுள்ளது என்பதும் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்,
 
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் ரன்வேயில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னைக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 கன மழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உள்பட 10 நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் இட்டு இருந்தன.  இதனை அடுத்து அந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
 
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva