ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (13:16 IST)

திமுக அரசை கண்டித்து ஜூன் 25-ல் போராட்டம்..! தேமுதிக அறிவிப்பு..!

Premalatha
திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் ஜூன் 25ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என்றும் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதோடு, கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

 
இந்நிலையில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து ஜூன் 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.