1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (12:04 IST)

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கை! – அரசுக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு!

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தும் அரசின் முடிவிற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டு முதலாக கொரோனா பாதிப்பால் பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முழு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது. முழு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் முழு கட்டணம் செலுத்தினால்தான் மாணவர்களின் மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் கறார் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கண்டனங்களை தெரிவித்துள்ளது.