ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (20:15 IST)

கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: பிரேமலதா

Premalatha
கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்டு எடுக்க இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார் 
 
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இதுகுறித்து அழுத்தத்தை கொடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்