ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 நவம்பர் 2022 (09:20 IST)

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: அரக்கோணம் ஆசிரியர் தலைமறைவு!

posco
அரக்கோணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது/ இதனையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக வேலியே பயிரை மேய்வது போல் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்பதும், இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் அரக்கோணம் காவேரிபாக்கம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் முருகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது 
 
இது குறித்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் ஆசிரியர் முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் முருகன் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் இருப்பதாகவும் 
 
Edited by Siva