டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள் - கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

cm
Last Modified சனி, 16 ஜூன் 2018 (10:39 IST)
டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள்  என புதுவை கவர்னர்  கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
kb
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, அரசின் செயல்பாடுகளில் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து மூக்கை நுழைக்கிறார். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. நாங்கள் சட்டப்படி செயல் பட விரும்புகிறோம்.
 
டெல்லியில் கவர்னருக்கு எதிராக அம்மாநில முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போல் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம். எனவே கிரண்பேடி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :