ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:16 IST)

சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி புகழாரம்

vijayakanth
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான் என பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.

 திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பேசியபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் 2023 ஆம் ஆண்டு இறுதியில் மக்கள் அதிக வலிகளை அனுபவித்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

சினிமா மற்றும் என்று அரசியல் ஆகிய இரண்டிலும் விஜயகாந்த் கேப்டனாக இருந்தார் என்றும் தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்ற விஜயகாந்த்  மக்கள் உள்ளங்களில் நிலை கொண்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.

விஜயகாந்த் மறைவு திரைப்படத்துறைக்கு மட்டுமின்றி அரசியலுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தியவர் தான் விஜயகாந்த் என்றும் அனைத்தையும் விட தேசத்தை விஜயகாந்த் அதிகம் நேசித்தார் என்றும் புகழாரம் சூட்டினார்.

Edited by Siva