1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (16:54 IST)

தினகரன் ஆர்ப்பாட்டத்தில் 50 பேரின் செல்போன், பணம் திருட்டு : தொண்டர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தொண்டர்களிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் உள்ள அண்ணாசிலை எதிரில் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், திருவண்ணாமலை சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
இரவு 7 மனிக்கு மேல் அந்த பகுதியில் மின்சார வெளிச்சமே இல்லை என்பதால், அதைப்பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் உள்ளே புகுந்து 50க்கும் மேற்பட்டோரின் செல்போன், பணம், நகை ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்புதான் இது தொண்டர்களுக்கு தெரிவந்துள்ளது.
 
இதுபற்றி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தினகரன் ஆதரவாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.