மகள் குடும்பம் நடத்துவதை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மகள் குடும்பம் நடத்துவதை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
siva| Last Updated: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (20:53 IST)
மகள் குடும்பம் நடத்துவதை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருவள்ளூரில் திருமணம் செய்து கொடுத்த மகள் குடும்பம் நடத்துவதை சந்தோசமாக பார்க்க வந்த பெற்றோர்கள் அவரை பிணமாக பார்த்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகன் என்பவருக்கும் மோகனப்பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி சண்டை போட்டு வந்த நிலையில் மோகனப்பிரியா சமீபத்தில் தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு வந்தார். அதன் பிறகு சமாதானபடுத்தி அவரை கணவருடன் பெற்றோர்கள் அனுப்பிவைத்தனர்
இந்த நிலையில் திடீரென மோகனப்பிரியாவின் பெற்றோருக்கு முருகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் மோகனப்பிரியா திடீரென உடல்நிலை சரியில்லை இருபப்தாகவும், அதனால் உடனடியாக வரவும் என்று கூறினார்.

இதனை அடுத்து மோகன பிரியாவின் பெற்றோர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகள் குடும்பம் நடத்துவதை சந்தோசமாக பார்க்க வந்த தங்களுக்கு தங்கள் மகளை பிணமாக பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று தெரிவித்தனர். உடனே இது குறித்து சந்தேகம் அடைந்த மோகனப்பிரியாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :