தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!

தமிழகம் முழுவதும்  விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!
siva| Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:49 IST)
தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!
தமிழகம் முழுவதும் சுமார் 12,525 ஊராட்சி செயலாளர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பிப்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2,525 ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது என்பதும், இதனையடுத்து சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :