ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (11:43 IST)

பல்லடம் 4 பேர் கொலை.. செல்லமுத்துவை அடுத்து சோனைமுத்து கைது..!

பல்லடம் அருகே நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சோனை முத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
நேற்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் துடிதுடிக்க வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தப்பிக்க முயன்றதாகவும் இதனை அடுத்து அவர் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது இதே வழக்கில் சோனை முத்து என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran