வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (16:06 IST)

அரசியல் பயணம் தொடங்கிய இடத்தில் அரசியல் இல்லை; கமல்ஹாசன்

இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றதில் அரசியல் இல்லை என்று கூறியுள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை அப்துல்கலாமின் பேரன் சலீம் வரவேற்றார். மேலும் அப்துல்கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். அப்துல்கலாம் பெற்ற பரிசுகள் கோப்பைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். 
 
இன்று காலை 8.15 மணிக்கு இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்தது. ஆதலால் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து பார்வையிட்டு சென்றார் கமல்ஹாசன். அரசியல் நோக்கம் இருப்பதால் கமல் பள்ளிக்குள் செல்ல தடை விதித்ததாக மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் தனது அரசியல் பயணம் தொடங்கிய இடத்தில் அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணம் தொடங்கியதில் எந்த அரசியலுல் இல்லை. அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல விரும்பினேன். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதிலும் எந்த அரசியலும் இல்லை என்று கூறியுள்ளார்.