1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:37 IST)

பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கா? அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நபர்களில் ஒமிக்ரான் அறிகுறி உள்ளவர்களது மாதிரிகள் மட்டும் ஒமிக்ரான் சோதனைக்காக ஆய்வகம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் டெல்டாவும், ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. லேசான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்கலாம் எனவும் தெரிவித்தார். அதோடு தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். 
 
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது எனவே  பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.