கண் திறந்த முருகன் சிலை - குவியும் பக்தர்கள்


K.N.Vadivel| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2015 (06:42 IST)
அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில், முருகன் சிலையில் உள்ள கண் திறந்தாக வெளியான தகவலை அடுத்து, அங்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது.
 
 
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ளது நடுகட்டி கிராமம். இங்கு சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.
 
இந்த கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த ஆல்தொரை என்பவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
 
அப்போது, ஆல்தொரையின் உறவினர்கள் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த போது, முருகன் சிலையின் இடது கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது.  இதைக் கேட்டு ஆச்சரியமடை பொது மக்கள் பலர் வரிசையாக முருகனை காண சென்றனர். அவர்களில் சிலரும் இதே கருத்தை முன்வைக்க, தற்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
 
மேலும், இந்த தகவல் அக்கம் பக்கம் ஊர்களுக்கும் பரவ கோவிலில் பல்வேறு கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முழுவதும் பரவியது.
 
இதையடுத்து நடுகட்டி கிராம மக்கள் தவிர அருகில் உள்ள கிராம மக்களும் வந்து முருகனை தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும், அந்த சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
 
முருகன் சிலையில் கண் திறந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :