புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்: ராஜேஷ் லக்கானி


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (04:26 IST)
புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
 
மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் பின்பு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அது குறித்த பயிற்சி முகாம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :