வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (17:01 IST)

யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே: உளறிய ஸ்டாலின், கலாய்த்த நெட்டிசன்கள்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி போல் அடுக்குமொழியிலும் பேசுவதில்லை, தமிழ் மொழியை பிறழாமலும் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்றும், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என்றும் பேசி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு உள்ளானார்.

இந்த நிலையில் ஸ்டாலின் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, 'யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்று பழமொழியையே மாற்றி பேசியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சை நெட்டிசன்கள் விடாமல் கலாய்த்து வருவதால் #ஸ்டாலின்பழமொழிகள் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. இதனால் திமுக தொண்டர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விழாவில் ஸ்டாலின் குறிப்பை பார்த்தபடியே பேசினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படியானால் அவருக்கு குறிப்பு எழுதி கொடுத்தவர்கள் தவறாக எழுதி கொடுத்துவிட்டார்களா? அல்லது ஸ்டாலின் தான் கவனக்குறைவால் மாற்றி பேசிவிட்டாரா? என்பது தெரியவில்லை.