வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (12:01 IST)

மகனை நீட் தேர்வுக்கு அழைத்து சென்ற தந்தை திடீர் மரணம்

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதும் தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் தமிழக மாணவர்கள் கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறையைபூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தன் மகனை நீட் தேர்வு எழுந்த எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த ஒரு விடுதியில் மகனுடன் தங்கியிருந்த கிருஷ்ணசாமி இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திடீரென மாரடைப்பால் காலமானார்.
 
மரணம் அடையும் முன் அந்த விடுதியின் மேலாளரிடம் கிருஷ்ணசாமி அவர்கள் தனது மகன் வேறு மாநிலத்திற்கு தேர்வு எழுத வந்தது குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை மரணம் அடைந்த நிலையிலும் அவரது மகனை நீட் தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளதாகவும், தந்தை இறந்த தகவல் இன்னும் அந்த மாணவருக்கு தெரியாது என்றும் அந்த விடுதியின் மேலாளர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு சி.பி.எஸ்.இ மற்றும் மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.