ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (17:21 IST)

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மகளை தாய் விபச்சாரத்தில் தள்ளியதாகவும் அவருடைய இரண்டாவது கணவர் புரோக்கராக செயல்பட்டு ஆட்களை பிடித்து வந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சூலூர் அருகே கருமத்தம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் வசித்து வந்தார். மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தாலும் அவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தான் உள்ளார்.
 
இந்த நிலையில் விபச்சாரம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று இரண்டாவது கணவரின் யோசனையால் தனது மகளையே விபச்சாரத்தில் தள்ளி உள்ளார். இதற்காக தனியாக வாடகைக்கு வீடு பிடித்து அந்த வீட்டை விபச்சார விடுதி ஆக்கி உள்ளனர்.
 
இரண்டாவது கணவர் புரோக்கர் ஆக செயல்பட்டு ஆட்களை பிடித்து வருவதாகவும் மகளுடன் உல்லாசமாக இருக்கும் நபர் கொடுக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
அந்த வீட்டில் அடிக்கடி ஆண்கள் வந்து போவதை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran