திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:59 IST)

புது கட்சி தொடங்குகிறாரா முக அழகிரி? திமுகவுக்கு மேலும் ஒரு சிக்கல்

ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் மட்டும் எம்பிக்களை இழுப்பதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குக செல்வம், கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் ஒருசில எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர்வதற்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது
 
இந்த நிலையில் திடீரென முக அழகிரி தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் ’கலைஞர் திமுக’ என்று ஆரம்பிக்க இருக்கும் அவரது கட்சியில் திமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஆளும் கட்சியான அதிமுகவை வரும் தேர்தலில் சமாளிக்கவே திமுக சவாலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் திடீரென முக அழகிரி தரப்பிலிருந்தும் சிக்கல்கள் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தனிக்கட்சியை ஆரம்பிக்க இதுதான் சரியான சமயம் என முக அழகிரி ஆதரவாளர்கள் அவருக்கு ஆலோசனை கூறி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் ’கலைஞர் திமுக’ என்ற கட்சியை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது., முக அழகிரி தனிக் கட்சி ஆரம்பித்தால் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்