திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran

தமிழ்நாட்டில் இனி மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

Senthil
தமிழ்நாட்டில் இனி மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார் 
 
இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் அமைதியை ஏற்படுத்தி உள்ளது