ஸ்டாலினை நம்பாதீங்க.. கடனை கட்டுற வழிய பாருங்க – அமைச்சர் செல்லூர் ராஜு

sellur raju
Last Modified வியாழன், 13 ஜூன் 2019 (17:22 IST)
கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வேன் என கூறினார்? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மதுரவாயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ”திமுகவை விட தரமான பொருட்களையும், சலுகைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என ஸ்டாலின் பேசினார். எதன் அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் இது மக்களை ஏமாற்றும் செயல். அவரது பேச்சை நம்பி யாராவது கடனை செலுத்தாமல் இருந்தால் முறைப்படி அவரவர் கடன் தொகையை செலுத்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :