1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (15:30 IST)

ஜென்டில்மேன பாத்து கேட்குற கேள்வியா இது? பாமகவுக்கு சீட் கன்ஃபார்ம் செய்த ஜெயகுமார்!!

நாங்க எப்போதுமே ஜென்டில்மேன், ஒப்பந்தத்தை கடைபிடிப்போம் என பாமகவுக்கு வழங்க உள்ள மாநிலங்களவை சீட் குறித்து ஜெயகுமார் பேசியுள்ளார். 
 
அடுத்த மாதம் 24 ஆம் தேதியோடு தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், விரைவில் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் இரு கட்சியும் தலா 3 எம்பிக்களை தேர்வு செய்யலாம். 
 
பாஜக அதிமுகவிடம் மாநிலங்களவை எம்பி பதவியில் ஒரு இடம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தத்தின்படி அதிமுக பாமகவிற்கு ஒரு சீட் கொடுக்க வேண்டி உள்ளது. 
இந்நிலையில், தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால், குறிப்பாக கூட்டணியில் இருந்த பாமக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில் பாமகவுக்கு மாநிலங்களவையில் சீட் வழங்கப்படாது என செய்திகள் வெளியானது. 
 
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம், பாமகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? என கேட்கப்பட்டதற்கு நாங்கள் எப்போதுமே ஜென்டில்மேன், போட்ட ஒப்பந்தத்தை கடைபிடிப்போம் என தெரிவித்தார். இதப் மூலம் பாமகவிற்கு நிச்சயம் சீட வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.