திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:27 IST)

அம்மாவை நினைத்து கண் கலங்கியே அமைச்சர் சி.வெ.கணேசன்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூரில் கால்நடை மருத்துவமனை திறந்து வைத்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் சி .வெ. கணேசன் கால்நடை மருத்துவமனையில்  கன்று குட்டிகளுக்கு மருந்துகளை கொடுத்தார்.
 
சொந்த ஊரான கழுதூரில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாகவும் தனது தாய் இந்த ஊரில் இருந்ததை நினைத்து கண்கலங்கி மன வேதனையோடு பேசினார்.
 
சுற்றி இருந்த பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். சமத்துவபுரத்தில் இருக்கும் பொது மக்களுக்கு நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கோரிக்கை வைத்தனர் உடனடியாக வட்டாட்சியரிடம் 15 நாட்களுக்குள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
 
அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளான மங்களூர், அடரி, ஆவினங்குடி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு, தெற்கு ,கிழக்கு  ஒன்றியங்கள் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் செயற்குழு கூட்டம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.