திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (14:38 IST)

ஆண்டிப்பட்டி சீட் இல்ல.. ஆனா அதிமுகவில் பதவி! – எம்.ஜி.ஆர் பேரனின் அரசியல் எண்ட்ரி!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த எம்.ஜி.ஆர் பேரனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் அண்ணன் வழி பேரனான வி.ராமச்சந்திரன் சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார்.

ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு அதிமுக இளைஞரணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் அவர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.