திரும்பி வந்த ஓ.பி.எஸ் - தெறிக்கும் மீம்ஸ்

Last Modified புதன், 25 ஜூலை 2018 (13:10 IST)
டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் தமிழக துணை முதல்வர் ஓ.பிஎஸ் திரும்பி வந்த விவாகரம், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

 
ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது திமுக சார்பில்  சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க ஓ.பி.எஸ் நேற்று டெல்லி சென்றார். ஆனால், அவரை தனது அலுவலக வாசலில் 45 நிமிடம் வரை காக்க வைத்துவிட்டு, அவரை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன்.

 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு குஷியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
 
அவற்றில் ரசிக்கும்படியான சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு..இதில் மேலும் படிக்கவும் :