திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (17:58 IST)

தமிழகம் வரும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திரா,கர்நாடக மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவல் தாக்கம் முடியாத நிலையில் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும். கேரளாம், மஹாராஷ்டிராவில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.