கமல் கட்சி நடத்தும் பேச்சுப்போட்டி: பரிசு ரூ.5 லட்சம்!

கமல் கட்சி நடத்தும் பேச்சுப்போட்டி: பரிசு ரூ.5 லட்சம்!
siva| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (16:57 IST)
கமல் கட்சி நடத்தும் பேச்சுப்போட்டி: பரிசு ரூ.5 லட்சம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பின் அவர் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இருப்பினும் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தின் மூலம் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து பேச்சுப் போட்டி ஒன்றை நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’நான் எம்எல்ஏ ஆனால் என்ன செய்வேன்’ என்ற தலைப்பில் இந்த பேச்சு போட்டி நடைபெறும் என்றும் இந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 3 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்தப் பேச்சுப் போட்டிக்கு மொத்த பரிசு ரூபாய் 5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து பலர் ஆர்வத்துடன் இந்த பேச்சு போட்டியில் கலந்து கொள்ள முன் வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :