மகாத்மா காந்தி ’தேசத்தின் மகன்’ ...? டங்க் ஸ்லிப் ஆன சர்ச்சை எம்.பி..

pragya singh thakur
sinoj kiyan| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (20:08 IST)
மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் காந்தியின் கொள்கைகளை மக்களிடத்தில் பரப்பி வருகின்றனர்.  அதன் ஒரு  பகுதியாக  கட்சியின் சார்பில் பாதயாத்திரைக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று,  மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங், இந்தப் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
 
இதுகுறித்து, பிரக்யா சிங் , செய்தியாளர்களிடம் பேட்டி அளித்ததாவது ;
 
’ராமர் ,கிருஷ்ணரைப் போன்று மகாத்மா காந்தியையும் இந்த ’தேசத்தின் மகனாக நினைக்கிறேன்’. அவரே எனது வழிகாட்டி அவருடைய கொள்கை வழிகளை பின்தொடர வேண்டும்’ என்று பேசினார்.
 
அதாவது,. காந்தியை தேசத்தந்தை என்று கூறுவதற்கு பதிலாக ’தேசத்தின் மகன்’ என்று வாய் தவறி கூறியுள்ளார் 

மேலும், இவர் இதற்கு முன் பலமுறை கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :