ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (11:01 IST)

யார் இந்த மகிழன்? ஒன்றரை ஆண்டுகள் கருணாநிதியுடன் இருந்து சமாதியில் சிரித்த ஒருவன்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீடிலேயே இருந்தார். 
அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வந்து தனது தொண்டர்களை பார்த்து கையசைப்பார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சில நேரங்களில் வெளியாகும். ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்த ஒருவன் இந்த மகிழன்.
 
மகிழன் கருணாநிதியின் கொள்ளுப்பேரன். அதாவது நடிகர் அருள்நிதியின் மகன். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்தபோதும் மகிழனுடன் எப்படியும் ஒரு மணி நேரமாவது செலவிடுவாராம் கருணாநிதி. 
 
சமீபத்தில், கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது மகிழனை கூட்டி வந்தார். அவனை கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்துள்ளான்.  
 
கருணாநிதி இறந்தது தெரியாமல் எப்போதும் போல அவரை பார்த்ததும் அவன் மகிழ்ச்சிகொண்டு, அவரை அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டதாம். வீட்டில் இருக்கும் போது கருணாநிதி நிறைய சிரித்ததர்கு மகிழந்தான் காரணம் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.