ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (11:46 IST)

பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ ரூ.3000..!

Mullai flower
பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின் போது மல்லிகைப்பூ விலையும் கிடுகிடு என உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மல்லிகைப்பூ விலை 3000 ரூபாய் என விற்பனையாகி வருவதாக வெளி வந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மல்லிகைப்பூ மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
 
மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய், சம்மங்கி, செவ்வந்தி 250 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 300 ரூபாய் எனவும் விற்பனையாகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விலை உயர்ந்தபோதிலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran