வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 13 மே 2023 (12:24 IST)

பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் லூலூ மால் ரெடி... !

சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது.
 
இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டம் முதல் பல இன்பரா கட்டமைப்புகளை மேம்படுத்தியும் விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்த வந்தே பாரத் ரயில் கூட சென்னை - கோவை மத்தியில் இயங்கும் வண்ணம் அமைந்தது.
 
இதற்கு ஏற்றார் போல் கோயமுத்தூரில் கமர்சியல் ரயில் எஸ்டேட் துறை எப்போதும் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. பெரும் நகரங்களில் இருந்து கோயமுத்தூருக்கு அலுவலகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் அலுவலகத்திற்கான டிமாண்ட் முதல் முன்னணி பிராண்ட்களின் கடைகள் கோயமுத்தூரில் விரிவாக்கம் செய்வதால் கமர்சியல் ரயில் எஸ்டேட் பிரிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விலையும் அதிகரித்து உள்ளது.
 
இவை அனைத்திற்கும் உச்சகட்டமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வர்த்தகம் செய்யும் LULU குரூப் தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்தது. இந்த முதலீட்டு ஒப்பந்தம் கீழ் சென்னை மற்றும் கோவையில் புதிய மால் திறக்க திட்டமிட்டு இருந்தது.
கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் வளாகத்தில் லூலூ மால் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பெரும்பாலான பணிகள் முடிந்து உள்ள நிலையில் அடுத்த சில வாரத்தில் திறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
பொதுவாக மால்கள் என்றால் பல மாடி கட்டிடமாக தான் இருக்கும், ஆனால் கோயமுத்தூரில் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் உருவாக்கபடும் லூலூ மால் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இது வடிவமைப்பில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைக்க கூடும்.