பாஜக வந்தும் காங். மீது பாசம்: சோனியாவுக்காக பொங்கிய குஷ்பு!!

Sugapriya Prakash| Last Modified புதன், 27 ஜனவரி 2021 (09:47 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக சேர்ந்தவர் விமர்சித்ததற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
தமிழகம் வந்த ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தின் போது நாக்பூரில் இருக்கும் டவுசர்வாலாக்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சோனியை சில கடும் சொற்களால் விமர்சித்தார் பாஜக தமிழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார். 
 
இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்த குஷ்பு, சமூக வலைத்தளங்களில் சோனியா பற்றிய கருத்துக்களைத் திரும்ப பெற வேண்டும் என்றும் பெண்களை அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :