1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (21:04 IST)

காவிரி கூக்குரல் இயக்கம் : சத்குருவில் ’பைக் பேரணி’ தமிழகம் வருகை...

காவிரி நதியை மீட்க வேண்டும் என்பதற்காக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை தலைகாரிவியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் வாகன பயணம் மேற்கொள்ள உள்ளதாக  தகவல் வெளியானது. இந்நிலையில்  கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கிய சத்குருவின் மோட்டார் வாகன பேரணி, இன்று தமிழகம் வந்தது. 
காவிரி நதியை மீட்பதற்காக ‘காவிரி கூக்குரல்” என்ற இயக்கத்தை “ஈஷா” மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். இந்த இயக்கம் தமிழகம் முழுவதும்ள்ள காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளுக்குள் 242 கோடி மரங்களை நடுவதாக இலக்கு நிர்ணயித்தது.
 
இதன் முதன் முயற்சியாக ஜக்கி வாசுதேவ்  தம் குழுவினருடன் கர்நாடகா மாநிலம் குடகிலிருந்து தமிழகத்தின் திருவாரூர் வரை சுமார் 1200 கி.மீ. மோட்டர் பைக்கிலேயே சென்று, அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டார். 
 
அதன் படி கடந்த செப்., 3 ஆம் தேதி,  கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள காவிரியின் மூலமான தலைகாவிரியிலிருந்து மோட்டார் பயணத்தை தொடங்கினார். அவர் கிளம்பியபோது மழை பெய்யத்தொடங்கியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் தனது மோட்டார் பயணத்தை தொடங்கினார்.
 
இந்நிலையில், 3500 கி.மீ பயண தூரத்தில் நடைபெறும் இந்த பேரணி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை வந்தனர். அங்கு சத்குரு குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்,   காவிரி கூக்குரல் குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்., மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், நடிகை நித்யா மேனன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 
இந்த விழாவில் பேசிய ஈஷா யோக மையம் நிறுவனர், சத்குரு வா பேசியதாவது : காவிரி கூக்குரல் இயக்கம் தமிழர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என தெரிவித்தார்.