ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (10:01 IST)

கவரைப்பேட்டை விபத்து! 18 ரயில்கள் ரத்து! செண்ட்ரலில் அலைமோதும் மக்கள்!

Train Crowd

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டதால் செண்ட்ரலில் இருந்து ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் செண்ட்ரலில் அலைமோதி வருகிறது.

 

 

சென்னையிலிருந்து புறப்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் சென்றுக் கொண்டிருந்தபோது சிக்னல் கோளாறால் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கவரைப்பேட்டையில் நேற்று இரவு முதலாக மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மீட்பு பணிகள் 12 மணி நேரமாக நீடித்து வரும் நிலையில் சென்னையிலிருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

 

சென்னை செண்ட்ரல் - திருப்பதி, திருப்பதி - புதுச்சேரி,சூலூர்பேட்டை - நெல்லூர், கடப்பா - அரக்கோணம், விஜயவாடா - சென்னை செண்ட்ரல், டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் விரைவு வண்டி என 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் கிடைக்கும் ரயில்களில் ஏறி வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

 

இதனால் செண்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் கூட்டமாக நிறைந்து காணப்படுகிறது.

 

Edit by Prasanth.K