ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (16:05 IST)

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

sathuragiri
இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், இன்று கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய, நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் மலையேற தொடங்கியதாகவும், இன்றைய பிரதோஷ வழிபாட்டை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



Edited by Mahendran