ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (08:49 IST)

இத்தனை நாள் கற்றதை அச்சமின்றி எழுதுங்கள்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கமல் வாழ்த்து..!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பலர் வாழ்த்து கூறிவரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் முக்கியமான தேர்வு 12ம் வகுப்பு தேர்வு என்பதும் பள்ளியில் எழுதும் கடைசி தேர்வான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் நல்ல கல்லூரியில் நல்ல படிப்பில் இடம் கிடைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதால் மாணவ மாணவிகள் இந்த தேர்வை மிகவும் கவனத்துடன் எழுதுவார்கள்.

இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அச்சமின்றி தேர்வு எழுதுங்கள் என மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள்.

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களை தழுவிக்கொள்ளும்


Edited by Siva