திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:35 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் பணிக்குழு அறிவித்த கமலஹாசன்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுக, திமுகவை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலை சந்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மாநில தலைமை பணிக்குழு மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ளார் 
 
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கார்ப்பரேஷன் கவுன்சில் பதவிக்கு 2,000 ரூபாயும் முனிசிபாலிட்டி கவுன்சில் பதவிக்கு ஆயிரம் ரூபாயும் டவுன் பஞ்சாயத்து பதவிக்கு 500 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும் பெண்களுக்கு 50% தள்ளுபடி என்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் டெபாசிட் கட்டணம் கிடையாது என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது