தினகரனை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ! இன்னொரு விக்கெட் போச்சா?

Last Updated: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (10:21 IST)
அதிமுகவில் இருந்து ஏற்கனவே ஒருசில எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் தினகரன் அணிக்கு தாவியுள்ள நிலையில் இன்று காலை திடீரென இன்னொரு அதிமுக எம்.எல்.எல் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதனால் அதிமுகவின் இன்னொரு போய்விடும் சூழல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன,.

அதிமுகவில் உள்ள தினகரனின் ஸ்லீப்பர்செல்கள் விரைவில் தினகரனை நோக்கி படையெடுப்பார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தினகரன் அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரிவின்போது ஈபிஎஸ் அணியில் இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக இருந்துவந்த நிலையில் இன்று திடீரென தினகரனை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை பிரபு எம்.எல்.ஏ சந்திக்கவுள்ளதாகவும், அப்போது இந்த சந்திப்பு குறித்து அவர் விளக்கமளிப்பார் என்றும் கூறப்படுகிறது
இதில் மேலும் படிக்கவும் :