ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:07 IST)

மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம்!

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாக் கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மராமத்து பணி காரணமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது.  இந்நிலையில் பணிகள் முடிந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பொதுமக்கள் வந்து பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.