ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:40 IST)

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு! – வெளியானது பட்டியல்!

NEET
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

அந்த வகையில் தற்போது 2023ம் ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சேலம் மாவட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த கிருத்திகா என்ற மாணவி முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 569 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பச்சையப்பன் என்ற மாணவர் உள்ளார்.

தரவரிசையின் டாப் 10 இடங்களில் 5 மாணவர்களும், 5 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.

Edit by Prasanth.K