இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் - இளையராஜா கோரிக்கை


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 21 நவம்பர் 2015 (18:21 IST)
சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
 
 
இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
 
விருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர்.
 
விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான் சொல்வதற்கு இது சரியான இடம் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால், இன்னும் மேலே போய் அரசாங்கத்திடம் ஏதேனும் செய்ய சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் வேண்டுவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :